அங்கேயும் தேள் டாட்டூ.. இங்கேயும் தேள் டாட்டூ.. த்ரிஷா புகைப்படதால் வேற லெவலில் யோசிக்கும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Saturday,August 26 2023]

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்த சூர்யாவின் கழுத்தில் தேள் டாட்டூ இருந்ததை போல் சமீபத்தில் வெளியாகியுள்ள த்ரிஷாவின் புகைப்படத்திலும் தேள் டாட்டூ இருப்பதை அடுத்து ’லியோ’ திரைப்படம் நிச்சயம் LCU படமாகத்தான் இருக்கும் என்பதை ரசிகர்கள் உறுதி செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார் என்பதும் த்ரிஷாவின் கேரக்டர் இந்த படத்தில் வேற லெவலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் த்ரிஷா இருக்கும் நிலையில் தற்போது அவர் ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஒரு கையில் ஜூஸ் வைத்த மாதிரி இருக்கும் இந்த புகைப்படத்தில் இன்னொரு கையில் அவர் தேள் டாட்டூ உடன் உள்ளதை ரசிகர்கள் கவனித்துள்ளனர்.

ஏற்கனவே சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரின் கழுத்தில் தேள் டாட்டூ இருந்ததை போல் த்ரிஷாவின் கையிலும் தேள் டாட்டூ இருப்பதால் இரு படத்திற்கும் கனெக்ஷன் இருக்கும் என்றும் 'லியோ’ திரைப்படம் கண்டிப்பாக LCU படம் தான் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.