நான் இல்லாம அந்த கேஸை எப்படி சால்வ் பண்ணுவீங்க.. த்ரிஷாவின் 'பிருந்தா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,July 21 2024]

நடிகை த்ரிஷா நடித்த ‘பிருந்தா’ என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிட்டியில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கொலையை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரி த்ரிஷா களமிறங்குகிறார். ஆனால் அவரது ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகளே த்ரிஷாவுக்கு எதிராக உள்ளனர்.

இந்த நிலையில் தொடர் கொலைகளை த்ரிஷா இல்லாமல் காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? அல்லது த்ரிஷா களத்தில் இறங்கினாரா? கொலையாளி பிடிபட்டாரா? என்பது தான் இந்த படத்தின் கதை என இரண்டு நிமிட ட்ரெய்லரில் இருந்து தெரியவந்துள்ளது. த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் அவருக்கு ஒரு வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

த்ரிஷா, இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சூரிய மனோஜ் என்பவர் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய 7 மொழிகளில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

விக்ரம் பட குழந்தை நட்சத்திரம். 20 ஆண்டுகளுக்கு பின் ஸ்காட்லாந்தில் பட்டம்..!

விக்ரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

'டீன்ஸ்' படத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா? விமர்சகர்களை கேள்வி கேட்கும் பார்த்திபன் நண்பர்..!

சமீபத்தில் பார்த்திபன் நடித்த 'டீன்ஸ்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் சில நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின.

நான் ஏஆர் ரஹ்மான் ஃபேன் சார்.. 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' டிரைலரை வெளியிட்ட ஏ ஆர் ரஹ்மான்..!

வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான' நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல் படத்தில் விஜய்.. விஜய் படத்தில் கமல்.. இணையத்தில் வைரலாகும் வேற லெவல் தகவல்..!

கமல்ஹாசன் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், விஜய் படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் வேற லெவலில் ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு வழியா என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிஞ்சது.. ரிலீஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர் ஹலிதா..!

இயக்குனர் ஹலிதா 'என்னாலயும் அப்டேட் கொடுக்க முடிந்தது' என்று கூறி தனது அடுத்த படமான 'மின்மினி' படத்தின் ரிலீஸ் தகவலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.