'தேங்க் யூ': மிகப்பெரிய அளவில் வைரலாகும் த்ரிஷாவின் பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,December 13 2022]

தேங்க்யூ என நடிகை த்ரிஷா பதிவு செய்த ட்விட் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷாஎன்பதும் இவர் இப்போது கூட இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களுக்கும் அதிகமாக அவர் நடித்து பிசியாகி நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் தான் நாயகியாக த்ரிஷா அறிமுகமானார். கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி இந்த படம் வெளியானதை அடுத்து த்ரிஷாதிரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த 20 ஆண்டுகளில் அவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த்ரிஷாவின் 20 ஆண்டு திரை உலக நாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அனைவருக்கும் தனது நன்றியை குறிப்பிடும் வகையில் ’தேங்க்யூ’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா பதிவு செய்துள்ளார். மேலும் அவர் இது குறித்து பதிவு செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.