'அரண்மனை 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விபரங்கள்

  • IndiaGlitz, [Thursday,January 21 2016]

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது 'அரண்மனை 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த படம் சென்சார் அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டது.


'அரண்மனை 2' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்தில் ஒருசில காட்சிகளை மட்டும் கட் செய்துவிட்டு படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'அரண்மனை 2' திரைப்படம் சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் 29ஆம் தேதி என்பது உறுதியாகிவிட்டது. சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சுந்தர் சி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.