மெகா ஸ்டார் படத்தில் இரட்டை வேடத்தில் த்ரிஷா ? இதுதான் முதல்முறையா?

  • IndiaGlitz, [Monday,March 11 2024]

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போதும் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் பிசியான நடிகையாக உள்ளார் என்பதும் அஜித் உடன் ’விடாமுயற்சி’ கமல்ஹாசன் உடன் ‘தக்லைஃப்’, மோகன்லால் உடன் ’ராம்’ நிவின் பாலுடன் ‘ஐடெண்டிட்டி’ மற்றும் சிரஞ்சீவி உடன் ’விஸ்வாம்பரா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்து வரும் ’விஸ்வாம்பரா’ என்ற திரைப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் நடிக்கும் இரண்டு கேரக்டர்களும் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றும் இந்த படம் தெலுங்கு திரை உலகில் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலின் படி த்ரிஷா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்றும் அவரது கேரக்டர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் இதற்கு முன் நடிகை த்ரிஷா, கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘மோகினி’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த நிலையில் மீண்டும் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

17 வருடத்தில் நான் பெற்ற முதல் பாராட்டு.. ஜிவி பிரகாஷின் நெகிழ்ச்சியான பதிவு..!

 நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கடந்த 17 வருடத்தில் முதல் முறையாக  ஏஆர் ரகுமான் அவர்களிடம் பாராட்டு பெறவில்லை என்றும், முதல்முறையாக இப்போதுதான் அவரிடம் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது

தமிழ் பொறுக்கி.. மலையாள பொறுக்கி.. இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறும் தவளைகள்: தமிழ் இயக்குனர்..!

சமீபத்தில் 'மஞ்சம்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அவரது விமர்சனத்திற்கு  தமிழ் இயக்குனர் ஒருவர்

அதிமுக அல்லது சீமான் கட்சி கூட்டணிக்கு போங்க.. நெட்டிசன் கருத்துக்கு ம.நீ.ம கட்சியின் நடிகை பதிலடி..!

திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுக்கப்படும் என்றும்  அந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்ட நி

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் 'அமீகோ கேரேஜ்':  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'அமீகோ கேரேஜ்'. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள

பேப்பரில் ஆட்டோகிராப் போடுவதெல்லாம் பழசு.. பாடகருக்கு விஜய் போட்ட கையெழுத்து எதில் தெரியுமா?

பொதுவாக பிரபலங்கள் பேப்பர்களில் ஆட்டோகிராப் போட்டு தங்களது ரசிகர்களுக்கு தருவதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் பாடகர் ஒருவர் தனது மொபைல் போனில் விஜய் இடம் ஆட்டோகிராப்