திடீரென இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளை டெலிட் செய்த த்ரிஷா: ரசிகர்கள் குழப்பம்

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தனது சமூக வலைகளில் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் திடீரென கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களுக்கு ஓய்வு கொடுத்து இருந்த த்ரிஷா சமீபத்தில் மீண்டும் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து போஸ்ட்டுகளையும் டெலிட் செய்து விட்டது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 7 போஸ்ட்டுகள் மட்டுமே உள்ளன என்பதும் அதில் ஒன்று சமீபத்தில் பதிவு செய்த விஜய்யின் ’கில்லி’ படத்தில் நடித்த போஸ்ட்டும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. த்ரிஷா ஏன் தனது பழைய போஸ்ட்டுகளை டெலிட் செய்துவிட்டார் என்ற காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் த்ரிஷா தற்போது ’பரமபதம் விளையாட்டு’ ’கர்ஜனை’ ’ராங்கி’ ’சுகர்’ ’ராம்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவற்றில் ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

3 வயது குழந்தையின் உயிரைப்பறித்த டிவி!!! பரபரப்பு சம்பவம்!!!

சென்னையின் தாம்பரம் அடுத்த சேலையூரில் டிவி மேல் இருந்த செல்போனை எடுக்க முயன்றதால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது

கொரோனா மரபணுவில் மாற்றம்-10 மடங்கு தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் பரவுவதாகப் பரபரப்பு!!!

கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றே இறுதித் தீர்வாக நம்பப்படுகிறது.

தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது: வேதாந்தா கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஆலைக்கு தடை விதித்தது

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் திடீர் மரணம்: கதறியழுத சீரியல் நடிகையின் வீடியோ

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் ஒருவர் திடீரென மரணம் அடைந்து விட்டதை அடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் கண்ணீருடன் கதறி அழுத வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது