அஜர்பைஜானில் த்ரிஷா.. க்யூட் புகைப்படங்கள் வைரல்..!

  • IndiaGlitz, [Friday,October 13 2023]

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பிற்காக அஜித், த்ரிஷா உட்பட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர் என்பதை பார்த்தோம்.

தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு நேரம் போக மீதமுள்ள நேரத்தில், அஜர்பைஜானில் உள்ள முக்கிய இடங்களுக்கு சென்று நடிகை த்ரிஷா புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. லைக்கா தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா தவிர இன்னொரு நாயகியாக ரெஜினா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது