தமிழக அரசின் சார்பில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகை த்ரிஷா
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக தினமும் 50க்கும் மேல் உயர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை வெளியிட்டுள்ள விளம்பர படமொன்றில் த்ரிஷா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூறியதாவது: கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்ற வைரஸ் மிக சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் வந்தவர்கள் தயவு செய்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தனிமைப்படுத்தல் என்பது உங்களை உங்களை இன்சல்ட் செய்யவோ அல்லது டார்ச்சர் செய்யவோ அல்ல. இது முழுக்க முழுக்க உங்களுடைய பாதுகாப்புக்காக தான். உங்கள் குடும்பத்தினர்களின் பாதுகாப்புக்காக குறிப்பாக உங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்புக்காக தான்
எனவே தனிமைப்படுத்துதலை கடைபிடித்து தயவுசெய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள். அனைவரும் ஒற்றுமையாக வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும். இவ்வாறு நடிகை திரிஷா கூறியுள்ளார்
#StayHome #StaySafe pic.twitter.com/TMhjGvIT8p
— Trish (@trishtrashers) April 7, 2020