இதுதான் தமிழ் கலாச்சாரமா? த்ரிஷா ஆவேசம்

  • IndiaGlitz, [Saturday,January 14 2017]


பீட்டா அமைப்புக்கு த்ரிஷா ஆதரவு கொடுத்து வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சமூக வலைத்தளங்களில் சிலர் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். தெருநாய்கள் உள்பட விலங்குகளுக்கு ஆதரவு அளித்து வரும் த்ரிஷா, தான் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை கூறவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் அவரை பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் ஒருசிலர் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்., ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் மோசமான முறையில் விமர்சனம் செய்வதுதான் தமிழ் கலாச்சாரமா? இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் தமிழர் கலாச்சாரம், தமிழர் குறித்து பேசுவதற்கு அருகதை இல்லாதவர்கள் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தின் தன்னுடைய புகைப்படத்தை பதிவு செய்து அதில் தோற்றம், மறைவு தேதியை போட்டு தனக்கு இரங்கல் தெரிவித்துள்ளதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

More News

'தல 57' படத்தின் முக்கிய மாற்றம்

சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த படம் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் டைப்பில் உள்ளது என்று கூறியதில் இருந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது...

பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பார்த்திபனின் அடுத்த படத்தின் டைட்டில் 'முன்பதிவாய் ஒரு முத்தம்' என்பதுதான். பொதுவாக பார்த்திபன் பட டைட்டில் கவிதை வடிவில் இருக்கும் என்பதை இந்த டைட்டிலும் உறுதி செய்துள்ளது...

இன்று முதல் 'பைரவா' படத்தில் திடீர் மாற்றம்

இந்நிலையில் 'பைரவா' படத்தில் பலர் கூறி வரும் ஒரு குறை படத்தின் நீளம் தான். 2 மணி 50 நிமிடங்கள் என்பது ஒரு மசாலா படத்திற்கு அதிகம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால் இன்று முதல் 'பைரவா' படத்தில் 7 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது...

ஜல்லிக்கட்டு: தடையை மீறினால் தவறில்லை. இல.கணேசன்

சுப்ரீம் கோர்ட் தடையை மீறி தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவை நடந்து வருகிறது.

கோவையில் தடையை மீறி ரேக்ளா ரேஸ்.

தமிழகத்தில் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில் கோவையில் உள்ள எட்டிமடை என்ற பகுதியில் தடையை மீறி ரேக்ளா ரேஸ் தற்போது நடைபெற்று வருகிறது