மனித குலத்திற்கே இவரால் அவமானம்: மன்சூர் அலிகானுக்கு த்ரிஷா கண்டனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மன்சூர் அலிகானால் மனித குலத்துக்கு அவமானம் என்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகர் மன்சூர் அலிகான் ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது ’லியோ’ படத்தில் நானும், த்ரிஷாவும் நடித்திருந்தாலும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என்றும் அவ்வாறு அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறியதோடு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் த்ரிஷா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாக அவமரியாதையாக வெறுக்கத்தக்க வகையில் பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
என்னுடன் அவர் திரையில் இணைந்து நடிக்க விருப்பப்படலாம். ஆனால் இது போன்ற நபருடன் நான் இதுவரை நடிக்கவில்லை என்பது எனக்கு ஒரு ஆறுதல். இனி வரும் நாட்களிலும் அவருடன் நான் திரையில் நடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்ற நபர்களால் தான் மனித குலத்திற்கே அவப்பெயர் ஏற்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார் த்ரிஷாவின் இந்த கண்டன பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
The context ....😡😡pic.twitter.com/n0ge3Qkzer
— Aryan (@chinchat09) November 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com