த்ரிஷாவின் சென்னை வீட்டை வாங்கிய 80s ஹீரோ.. பசுமையாக மாற்றிய மனைவி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
த்ரிஷாவின் சென்னை வீட்டை 80s பிரபல நடிகர் வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டை அவருடைய மனைவி பச்சை பசேல் என பசுமையாக மாற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 80களில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த நடிகராக இருந்தவர் பானுசந்தர். இவர் பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ’மூடுபனி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அருண் விஜய் நடித்த ’ஓ மை டாக்’ என்ற படத்தில் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பானுசந்தருக்கு தற்போது 72 வயது ஆகும் நிலையில் சமீபத்தில் அவர் த்ரிஷாவின் சென்னை வீட்டை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா சென்னையில் பல ஆண்டுகள் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறொரு இடத்திற்கு குடிமர்ந்ததாக கூறப்படும் நிலையில் அவர் வசித்த வீட்டை தமிழ் தெலுங்கு பிரபல நடிகர் பானுசந்தர் பெரும் தொகைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டி அளித்த அவர் ’இந்த வீட்டை தன்னுடைய மனைவிதான் அழகாக பராமரித்து வருவதாகவும் வீட்டில் நுழைந்தவுடன் இருந்த மினி பார் தற்போது அழகு பொருள் வைக்கும் இடமாக மாற்றி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டை சுற்றி பச்சை பசேல் என செடிகளை நட்டது தனது மனைவிதான் என்றும் அவருக்கு செடிகள் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று அவர் கூறினார்.
பாலச்சந்தர் இளைய மகன் டாக்டர் பட்டம் பெற்று விட்டதாகவும் மூத்த மகன் திரையுலகில் நடித்து வருவதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments