close
Choose your channels

'விடாமுயற்சி' படத்தில் த்ரிஷாவுக்கு என்ன கேரக்டர்? சுரேஷ் சந்திரா வெளியிட்ட ரகசியம்..!

Monday, July 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சுரேஷ் சந்திரா, இந்த படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு என்ன கேரக்டர் என்பதை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நிலையில் அந்த போஸ்டர் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும், அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுரேஷ் சந்திரா ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் மனைவியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித் மற்றும் த்ரிஷா இந்த படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அஜித், அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், த்ரிஷா நாளை அல்லது நாளை மறுநாள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதன் பிறகு சில பணிகள் மும்பை மற்றும் சென்னையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்த போது தட்பவெப்ப நிலை காரணமாக 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்ததாகவும் ஆனால் தற்போது 14 முதல் 15 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment