close
Choose your channels

த்ரிஷா வீட்டில் என்ன விசேஷம்? கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் வைரல்..!

Wednesday, July 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா வீட்டில் விசேஷம் நடந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை த்ரிஷா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நாயகியாக ஜொலித்து வருகிறார் என்பதும் தற்போது ஒரே நேரத்தில் அஜித் உடன் ’விடாமுயற்சி’ விஜய்யுடன் ’கோட்’ சிரஞ்சீவி உடன் ’விஸ்வாம்பரா’ கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’ மோகன் லால் உடன் ’ராம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் சில பெரிய பட்ஜெட் படங்களில் அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் கேக் வெட்டி அவர் தனது அம்மாவுக்கு ஊட்டுவது போன்ற காட்சி உள்ளதை எடுத்து த்ரிஷாவின் அம்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் த்ரிஷா இந்த வாரம் அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜர்பைஜான் செல்ல இருப்பதாகவும் இந்த படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.