காஷ்மீரில் உள்ள சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யும் த்ரிஷா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

தளபதி விஜய் நடித்துவரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீரில் இருக்கும் நடிகை த்ரிஷா அங்கு சிவன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நேற்று சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் ஏராளமான திரையுலக பிரபலங்களும் சிவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகை த்ரிஷா காஷ்மீரில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு சிவன் சிலைக்கு பாலபிஷேகம் செய்தார். அதன் பிறகு அங்கு உள்ள கோவில் பூசாரி ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுக்க அந்த பொருட்களை அவர் அபிஷேகம் செய்யும் காட்சி வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவுக்கு ‘ஓம் நமசிவாய’ என்பது உள்பட பல கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து உள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.