த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Saturday,November 05 2016]

கடந்த தீபாவளி தினத்தில் தனுஷுடன் த்ரிஷா நடித்த 'கொடி' தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் த்ரிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமணம் நின்று போனதற்கான காரணத்தை முதல்முதலாக மனம்விட்டு கூறியுள்ளார்.
என்னை திருமணம் செய்ய இருந்தவர் சினிமாவில் இருந்து விலகிவிட வேண்டும் என்று வற்புறுத்தினார். என்னால் அது முடியாது என்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டேன். தனது இறுதி மூச்சு இருக்கும் வரை நடிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்' என்று த்ரிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும், அதே வருடம் மே மாதம் நிச்சயதார்த்த முறிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'பைரவா' படத்தின் இன்னொரு பாடல் வரிகள் இதோ

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்தின் 'பட்டையக் கெளப்பு, குட்டையக் குழப்பு' பாடல் வரிகளை சமீபத்தில் கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

சூர்யா-விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த பிரபலம்

பிரபல ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குனர் சுரேஷ் மேனனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தினேஷின் 'உள்குத்து' சென்சார் தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தினேஷ், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது உள்குத்து, மெர்லின், அண்ணனுக்கு ஜே, வாராயோ வெண்ணிலவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் 'எஸ் 3' டீசரின் ரன்னிங் டைம்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'எஸ் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது

'தெறி' சாதனையை முறியடித்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முற்றிலும் முடிவடையவுள்ளது