த்ரிஷாவிடம் குத்து வாங்கிய அதிர்ஷ்டகாரர்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா. இவருடன் நடித்த நடிகைகள் பலர் அக்கா, அம்மா வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கும் நிலையில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக இன்னும் நாயகியாக திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார்

த்ரிஷா தற்போது 96, 1818, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

த்ரிஷாவும் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஒருவரும் பாக்சிங் சண்டையிடும் இந்த வீடியோ ரசிகர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது. இந்த பயிற்சி த்ரிஷா நடித்து வரும் படத்தின் கேரக்டருக்காகவா என்பது இனிமேல்தான் தெரியவரும். இருப்பினும் 34 வயதிலும் த்ரிஷா இன்னும் டீன் ஏஜ் பெண் போல் சுறுசுறுப்பாக பாக்சிங் செய்யும் வீடியோ அனைவரையும் கவர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஜாக்குலினை அடுத்து சினிமாவில் அறிமுகமாகும் ரக்சன்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ஜாக்குலின், ரக்சன் ஏற்கனவே பிரபலம் அடைந்த நிலையில், ஜாக்குலின், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்துவருகிறார்

ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய லேட்டஸ்ட் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்று நேற்று வெளியான செய்தி ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

மோடி மோசடியால் விராத் கோஹ்லி பதவிக்கு ஆபத்தா?

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அந்த வங்கியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பட இயக்குனர்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில்' படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அதிரடி முடிவெடித்த தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் டிடிஎஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்