ஆர்ப்பாட்டமில்லாத அழகினால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை த்ரிஷா… பிறந்தநாள் இன்று!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

தனது ஆர்ப்பாட்டமில்லாத அழகினாலும் ஸ்டைலான நடிப்பினாலும் தமிழ் ரசிகர்களை கிட்டத்தட்ட 24 வருடங்களாகக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர்தான் நடிகை த்ரிஷா. அவர் 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணன் – உமா தம்பதிகளுக்கு 1983 இல் பிறந்த த்ரிஷா மாடலிங் மீது இருந்த ஆர்வத்தினால் தனது பள்ளிப் பருவத்திலேயே மாடலிங் செய்ய ஆரம்பித்து பின்னர் 1999 இல் மிஸ் சேலம், மிஸ் சென்னை போன்ற பட்டங்களை வென்றெடுத்தார். அதைத் தொடர்ந்து சினிமா துறையில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்த அவருக்கு முதலில் கிடைத்தது என்னவோ சிறிய வேடம்தான். அந்த அடிப்படையில் நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை சிம்ரன் நடிப்பில் 1999 இல் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

பின்னர் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘லேசா லேசா‘ திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு முன்பே அமீரின் இயக்கத்தில் உருவான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடிகர் சூர்யாவிற்கு ஜோடியானார். தனது முதல் திரைப்படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் எளிமையான நடிப்பில் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த இவருக்குப் படிப்படியாக பல வெற்றிப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் நடிகை த்ரிஷாவிற்கு சாமி, கில்லி, விண்ணைத் தாண்டி வருவாயா, 96 போன்ற திரைப்படங்கள் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தன. இதனால் சாமி மாமி, ஜெஸ்ஸி, ஜானு எனப் பல கதாபாத்திரங்களை ரசிகர்களைக் கொண்டாடி தீர்த்தனர். இந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அமைந்த குந்தவை கதாபாத்திரமும் இணைந்து கொண்டது.

கமர்ஷியலைத் தவிர நடிகை த்ரிஷா ‘அபியும் நானும்‘, ‘சர்வம்‘, ‘உனக்கும் எனக்கும்‘ போன்ற திரைப்படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ‘தூங்காவனம்‘, ‘கொடி‘ போன்ற திரைப்படங்களில் தனது அவரது தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருந்தன. தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் ஹீரோயின் என்றாலே ஒருசில திரைப்படங்களுக்குப் பின்னர் அண்ணி, அம்மா காதாபாத்திரங்களுக்கு தாவிவிடும் பலருக்கு மத்தியில் நடிகை த்ரிஷா தனது முதல் திரைப்படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல தனது 40 வயதிலும் நடிகையாக சாதித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு அவருடைய உழைப்பும், அயராத முயற்சியும் முக்கிய காரணமாக இருக்கிறது. இன்று 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நடிகை த்ரிஷாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

More News

ரூ.200 கோடியா? பிரமிக்க வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் நெக்லஸ் பற்றிய தகவல்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்படுகிற நடிகை பிரியங்கா சோப்ரா

காஷ்மீர் சென்றது 'SK21' படக்குழு.. இனி வேற லெவலில் படப்பிடிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 21வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகி

எனக்கா ஃபேர்வெல்? ஓய்வு குறித்து டோனியின் கருத்தால் உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தத்துப்பிள்ளையான டோனியின் ஓய்வுக் குறித்த பயத்தில்

அந்த கேமிராமேன் வேலை கொஞ்சம் கிடைக்குமா? ரைசா வில்சன் பீச் போட்டோஷூட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்..!

நடிகை ரைசா வில்சனின் போட்டோஷூட் பீச்சில் நடைபெறும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி இருக்கும் நிலையில் அந்த கேமராமேன் வேலை தங்களுக்கு கிடைக்குமா? என பலர் காமெடியாக கமெண்ட்ஸ் பதிவு செய்து

மனைவியுடன் அந்தரத்தில் தொங்கும் செல்வராகவன்.. அதிர்ச்சி வீடியோ..!

இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலியுடன் அந்தரத்தில் தொங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.