ஆன்மீக நகரில் பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா .. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருவதை அடுத்து அந்த படத்தின் குழுவினர் சிறப்பு புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

மேலும் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’தி ரோடு’ என்ற படத்தின் குழுவினர் இன்று மாலை 6.02 மணிக்கு த்ரிஷாவின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் ஆன்மீக நகரங்களில் ஒன்றான சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தையும் அதன் பின்னர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த க்யூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


 

More News

'மாவீரன்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயன் நடித்து வரும் இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றான 'மாவீரன்' ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்

தமிழ்த் திரையுலகில் அடுத்த சோகம்… பிரபல நடன இயக்குநர் சம்பத்ராஜ் உயிரிழப்பு!

நடிகர், இயக்குநர் மனோபாலா இறந்த சோகத்தில் இருந்தே பலரும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது

பிறந்த நாளில் த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த 'லியோ' படக்குழு..! வைரல் புகைப்படம்..!

 நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் த்ரிஷா பிறந்த நாளை

சொக்கத் தங்கமே… ஒரு இன்ஸ்டா புகைப்படத்திற்காக நிவேதா பெத்துராஜை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

கர்ப்பமான வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்ட இலியானா..!

நடிகை இலியானா திருமணம் செய்து கொண்டதாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.