த்ரிஷாவை சந்திக்க கார்த்தி விருப்பம்.. யோசித்து செய்தி அனுப்புவதாக த்ரிஷா பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷாவை சந்திக்க கார்த்தி விருப்பம் தெரிவித்த நிலையில் ’யோசித்து செய்தி அனுப்புவதாக த்ரிஷா பதில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ’அகம் நக’ என்ற பாடல் இன்று வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ’இளைய பிராட்டியாரே’ என த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்து தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் தெரிவித்த த்ரிஷா ‘என்ன வாணர்குல இளவரசே’ என்று கூறியிருந்தார். அதற்கு கார்த்தி, ‘தங்களை தரிசனம் செய்ய விருப்பம்’ என தெரிவித்திருந்த நிலையில் ’ம்ம்ம்.. யோசித்து செய்தி அனுப்புகிறேன்’ என த்ரிஷா பதில் தெரிவித்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளைய பிராட்டி குந்தவி தேவி கேரக்டரில் த்ரிஷாவும், வாணர்குல இளவரசர் வந்தியத்தவன் கேரக்டரில் கார்த்தியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
என்ன வாணர்குல இளவரசே? https://t.co/k9n6EYyGES
— Trish (@trishtrashers) March 20, 2023
ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன் https://t.co/h62Z1d9IMR
— Trish (@trishtrashers) March 20, 2023
வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு?
— Trish (@trishtrashers) March 20, 2023
கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ? https://t.co/TRDJiSqphm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments