ட்விட்டரில் ப்ளூ டிக் இழந்த த்ரிஷா, ஜெயம் ரவி.. 'பொன்னியின் செல்வன்' புரமோஷன் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
'பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் காரணமாக நடிகர் ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் ட்விட்டரில் ப்ளூ டிக் இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு புரமோஷன் செய்து வரும் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்திலும் பெயர்களை மாற்றியுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குந்தவை என்றும் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பெயரை அருள்மொழிவர்மன் என்றும் மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷனால் ஜெயம் ரவி, த்ரிஷா தங்களது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியதால் அவர்களுடைய ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றம் செய்யப்பட்டது என்பதும் அந்த மாற்றத்தில் புதிய விதிகளின்படி ஒரு டுவிட்டர் பயனளி தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றினால் அவர்கள் தங்களது புளூடிக்கை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதியின்படி த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தின் புளூடிக்கை இழந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com