ஹேக்கிங் பிரச்சனையில் சிக்கிய த்ரிஷா-ஹன்சிகா. பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Monday,November 21 2016]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான த்ரிஷா மற்றும் ஹன்சிகாவுக்கு ஒரே நேரத்தில் ஏற்பட்ட ஹேக்கிங் பிரச்சனையால் இருவரது மொபைல் போன்களில் உள்ள காண்டாக்ட் எண்களை அவர்கள் இழந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகை த்ரிஷாவின் மொபைல் போனை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து அதில் இருந்த காண்டாக்ட் எண்களை அழித்துவிட்டதாகவும் தற்போது த்ரிஷாவால் யாருடனும் மொபைல்போன் மூலம் தொடர் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ஒரு வேலையில்லாத கோழை என்னுடைய மொபைல் போனை ஹேக் செய்துள்ளார். இதனால் எனது மொபைல் போனில் உள்ள அனைத்து தொடர்பு எண்களும் அழிந்துவிட்டது. என்னுடைய மொபைல் எண் தெரிந்தவர்கள் தயவு செய்து வாட்ஸ் அப் மூலம் உங்கள் பெயரை போட்டு எண்களை அனுப்பி வைக்கவும் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவை ரீடுவீட் செய்த ஹன்சிகா தனக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தயவு செய்து தனக்கும் நண்பர்கள் மொபைல் எண்களை அனுப்பி வைக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.