மன்சூர் அலிகான் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் த்ரிஷா?

  • IndiaGlitz, [Wednesday,November 22 2023]

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்னொரு பக்கம் த்ரிஷா 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள மாஸ் நடிகர் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைப்’ படத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே திரிவிக்ரம் இயக்கிய ’அதோடு’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது