சினிமாவில் 19 வருடங்கள்… கேக் வெடĮ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 19 வருடம் ஹீரோயினாக மட்டுமே நடித்து அசத்தி வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா அதே ஆண்டில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான “ஜோடி“ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 2002இல் நடிகர் சூர்யா நடிப்பில் “மௌனம் பேசியதே“ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார். தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகிய “பரமபதம்“ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தொடர்ந்து “கர்ஜனை“, “சதுரங்க வேட்டை2“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே பிரம்மாண்ட திரைப்படமான “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்தில் குந்தவியாக இவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் தற்போது 19 சினிமா வாழ்க்கையை நிறைவு செய்து இருக்கிறார். இதை சிறப்பிக்கும் விதமாக நடிகை த்ரிஷா தனது நண்பர்களுடன் கேக் வெட்டிக் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை த்ரிஷா “ஒருமுறை ஞானி என்னிடம் சொன்னார், விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள். அதனால் நான் இந்த வேலையை செய்தேன்.
நான் இன்னும் விடுமுறையில் இருக்கிறேன். இந்தப்பயணத்தில் என்னுடன் இருந்தவர்களுக்காக நான் உன்னை ஒருபோதும் விடவில்லை. உங்கள் அனைவராலும் நான் இந்த இடத்தில் இன்று இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி“ எனப் பதிவிட்டு உள்ளார். இதையடுத்து நடிகை த்ரிஷாவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com