மைனஸ் இரட்டை டிகிரி குளிரில் நடித்த த்ரிஷா! ஒரு ஆச்சரிய தகவல்
- IndiaGlitz, [Tuesday,February 11 2020]
தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ராங்கி’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள நிலையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளதாம். இந்தக் குளிரிலும் த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை எம் சரவணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘எங்கேயும் எப்போதும்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கதை வசனம் எழுதியுள்ள இந்த படத்தின் உஸ்பெகிஸ்தான் படப்பிடிப்பு பிப்ரவரி 19ஆம் தேதி முடிவடைந்தது விடும் என்றும், இதனை அடுத்து அடுத்த கட்டமாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.