ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தில் த்ரிஷா?

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் அவரது கதை வசனத்தில் உருவாகவுள்ள படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சரவணன் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் தற்போது உடல்நிலை தேறி வந்துள்ள நிலையில் அவரது குருவான ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய சொந்த கதை ஒன்றை சரவணனுக்கு கொடுத்து உதவியுள்ளார். மேலும் இயக்குனர் சரவணன் இயக்கவுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவும் அவர் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் கதை வசனத்தில் சரவணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் இந்த படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

த்ரிஷா தற்போது சிம்ரனுடன் இணைந்து ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் சரவணன் படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

தாயுடன் தகாத உறவு: சரமாரியாக குத்தி கொலை செய்த மகன்!

தாயுடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரை அவருடைய மகன் சரிமாரியாக குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.

அதிமுகவுக்கு எதிராக தனியாக களமிறங்கிய விஜய் ரசிகை

வரும் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் விஜய் ரசிகை ஒருவர் அதிமுகவுக்கு எதிராக தனியாக களமிறங்கியுள்ளார்.

பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாமே! கஸ்தூரிக்கு லதா கண்டனம்

நடிகை கஸ்தூரி நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா போட்டி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார்.

கன்னத்தை தடவியதை கூறியது குற்றமா? வருத்தம் தெரிவித்த கஸ்தூரி

எம்ஜிஆர், லதாவை தடவின மாதிரி சிஎஸ்கே அணி இந்த தடவு தடவுகிறதே என்று நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

மனைவியிடம் வருத்தம் தெரிவித்த பொல்லார்டு

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் குவித்தது.