39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா.. எப்படி ஒப்புக்கொண்டார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னணி நடிகைகள் சிறு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கு கூட யோசிக்கும் நிலையில் 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்க நடிகை த்ரிஷா ஒப்புக்கொண்டது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும் இவர் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.
அதுமட்டுமின்றி விஜய்யின் ’லியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக அஜித்தின் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’ப்ரோ டாடி’ என்ற படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவியும், மீனா நடித்த கேரக்டரில் த்ரிஷாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மோகன்லால் - மீனா மகனாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடித்திருந்த நிலையில் இந்த கேரக்டரில் தெலுங்கில் சர்வானந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சர்வானந்த் வயது 39 என்ற நிலையில் அவரது அம்மாவாக நடிக்கும் த்ரிஷாவுக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் வலுவாக இருப்பதாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும் த்ரிஷா 39 வயது நடிகருக்கு மகனாக நடிக்க அம்மாவாக நடித்த ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
வயதுக்கு வந்த மகன் இருக்கும் போது த்ரிஷா திடீரென கர்ப்பமானதால் அந்த வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சலசலப்பு தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com