சவாலில் சூர்யாவை முந்திய த்ரிஷா: வைரலாகும் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தனது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார் என்பதையும் அதன் பின்னர் அவர் இந்த சேலஞ்சை நடிகர்கள் மோகன்லால், சூர்யா, நடிகைகள் ரக்ஷிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா ஆகியோர்களுக்கு விடுத்திருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் பிரகாஷ்ராஜின் சேலஞ்சை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அந்த சவாலை நிறைவேற்றியும் உள்ளார். தனது வீட்டின் தோட்டத்தில் இரண்டு செடிகளை நட்டுள்ளதாகவும், அனைவரும் இந்த சவாலை ஏற்று க்ரீன் இந்தியாவாக உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சூர்யா உள்பட ஐந்து பேர்களுக்கு பிரகாஷ்ராஜ், க்ரீன் இந்தியா சேலஞ்சை விடுத்திருந்த நிலையில் முதல் நபராக இந்த சேலஞ்சை ஏற்று, நிறைவேற்றியும் உள்ளார் த்ரிஷா. இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விரைவில் சூர்யாவிடம் இருந்தும் இந்த சேலஞ்ச் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
I accepted the #GreenIndiaChallenge and planted two saplings today.
— Trish (@trishtrashers) October 3, 2020
I request you all to do your bit and help towards a greener India?? pic.twitter.com/poz7r3kRRV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com