தனுஷூடன் நடித்த அனுபவம். 'கொடி' படம் குறித்து த்ரிஷா பேட்டி
Thursday, October 27, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ், த்ரிஷா நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து த்ரிஷா சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார்.
'கொடி' படத்தில் முதல்முறையாக தனுஷூடன் முதல்முறையாக நடிப்பது, அதேபோல் முதல்முறையாக வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் நடிப்பது என்பதால் இந்த படம் கண்டிப்பாக தனது ஸ்பெஷலான படம் என்று கூறிய த்ரிஷா, முதலில் இந்த படத்தில் நடிக்கலாமா? என்று கூட தான் யோசித்ததாக கூறினார்.
இதுவரை தன்னை பக்கத்து வீட்டு பெண் போல பல கேரக்டர்களில் நடித்துவிட்டு திடீரென நெகட்டிவ் கேரக்டர் அதிலும் பாலிடிக்ஸ் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று முதலில் யோசித்தேன். பின்னர் துரை கொடுத்த ஸ்க்ரிப்ப்டை முழுமையாக படித்ததும் இதுவொரு சவாலான கேரக்டர் என்பது புரிந்தது. இப்போது இதுமாதிரி கேரக்டரில் நடிக்கவில்லை என்றால் பின் எப்போது நடிப்பது என்று துணிந்து ஏற்றுக் கொண்டேன்' என்று கூறினார்.
தனுஷை எனக்கு பத்து வருடங்களுக்கு மேல் தெரியும். நிறைய விருது வழங்கும் விழாக்களில் பார்த்து பேசியுள்ளேன். ஆனால் இரண்டு பேருமே அவரவர் வேலைகளில் பிசியாக இருந்ததால் இருவரும் இணைந்து நடிக்க நேரம் ஒத்துவரவில்லை. இப்போது நேரம் சரியாக அமைந்ததால் இணைந்து நடித்துள்ளோம். கண்டிப்பாக ஒரு புது ஜோடி என்பதால் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்ந்து கொள்ளலாம் என்று த்ரிஷா தனுஷ் குறித்து கூறினார்.
'கொடி' பட டீம் ஒரு ஜாலியான டீம். ஒவ்வொரு காட்சியும் நன்றாக வரவேண்டும் என்றும் தனுஷ் மற்றும் இயக்குனர் அவ்வப்போது ஆலோசனை செய்வார்கள். ஒரு நடிகர் தானே இண்ட்ரெஸ்ட் எடுத்து படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக டிஸ்கஸ் செய்வது ஆரோக்கியமானதுதான். மேலும் எனக்கும் தனுஷ் பல டிப்ஸ்கள் கொடுத்தார். தனுஷ், மற்றும் இயக்குனரின் ஆலோசனையின்படி இந்த படத்தில் நடித்துள்ளேன்.
அரசியல் படத்தில் நடித்ததால் அரசியலில் வருவேன் என்பது அர்த்தமல்ல. நான் தினந்தோறும் பேப்பர் படிப்பேன், நியூஸ் பார்ப்பேன், மற்றபடி அரசியலில் போய் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாது. அந்த ஐடியா எனக்கு சுத்தமாக இல்லை.
இத்தனை வருடமாக நடித்து கொண்டிருந்தாலும் ரஜினி சார் படத்தில் இன்னும் நடிக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருந்ததுண்டு. அவருடன் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. பல முன்னணி நடிகர்களுடன் பலமுறை இணைந்து நடித்துவிட்டேன். இருப்பினும் ரஜினி சாருடன் விரைவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்
இவ்வாறு த்ரிஷா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments