பாஜக எம்.எல்.ஏவுக்கு த்ரிஷா விட்ட சாபம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை த்ரிஷா, நடிப்பில் மட்டுமின்றி விலங்குகளின் நலனுக்காகவும் பாடுபடுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. விலங்குகள் நல அமைப்பின் தூதராக இருக்கும் அவர் விலங்குகளுக்கு ஏதாவது கொடுமை நிகழ்ந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பார்.
இந்நிலையில் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் போராட்டம் ஒன்று நடைபெற்றபோது அங்கு வந்த பாஜக எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி என்பவர் சக்திமான் என்ற குதிரையை கடுமையாக தாக்கினார். இதனால் அந்த குதிரை நிலைகுலைந்து போனது. குதிரையின் காலில் பலமாக அடிபட்டிருப்பதாகவும் அந்த குதிரை இனிமேல் எழுந்து நிற்பது கடினம் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, '"மிகவும் வெட்ககேடான செயலை செய்த நீங்கள் நரகத்துக்குச் செல்ல நான் இறைவனை வேண்டுகிறேன்" என்று சாபமிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com