4 நாட்கள் டான்ஸ் ரிகர்சல் பார்த்த த்ரிஷா.. எந்த படத்திற்காக? வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா தான் நடித்து வரும் திரைப்படத்திற்காக நான்கு நாட்கள் டான்ஸ் ரிகர்சல் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
நடிகை த்ரிஷா தற்போது அஜித் உடன் ’விடாமுயற்சி’ மோகன்லாலுடன் ’ராம்’ கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’ சிரஞ்சீவி உடன் ‘விஸ்வாம்பரா’ மற்றும் டொவினோ தாமஸ் உடன் ’ஐடெண்டிட்டி’ ஆகிய ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் த்ரிஷா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக த்ரிஷா கடந்த நான்கு நாட்களாக ரிகர்சல் செய்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தெரிவித்துள்ளார். இதில் அவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா உள்பட படக்குழுவினர்களுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’தக்லைஃப்’ படத்தின் பாடல் காட்சி விரைவில் படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக பிரமாண்டமான சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இந்த பாடலின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’தக்லைஃப்’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, சிம்பு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
@trishtrashers during the dance rehearsal for #ThugLife#Trisha #SouthQueenTrisha pic.twitter.com/pUpqx0Axe8
— Trisha Krishnan FC (@ActressTrisha) May 22, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments