கண்ணாமூச்சி விளையாடிய 8 வயது சிறுமி- உடனிருந்த சிறுவர்களே கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை!!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்கு திரிபுராவின் தபாரியா மாவட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடிய சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து 8 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 3 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை பக்கத்தில் உள்ள சிறுவர்கள் கண்ணாமூச்சி விளையாட அழைத்திருக்கின்றனர். சிறுமியும் அவர்களுடன் விளையாட சென்றிருக்கிறார். அப்போது ஏறக்குறைய ஒத்த வயதுடைய 7 சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய சிறுமி பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார். மேலும் தன்னுடன் விளையாடிய 7 சிறுவர்களையும் அவர் அடையாளம் காட்டியிருக்கிறார். பதறிப்போன பெற்றோர்கள் சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். சிறுமி கொடுத்த தகவலின்பேரின் நேற்று 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சிறுவர்களில் 4 பேர் தற்போது சிறார் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 12 வயதுடைய 2 சிறுவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதகாவும் கூறப்படுகிறது. இவர்களைத் தவிர ஒரு சிறுவன் இன்னும் தலைமறைவாக இருக்கிறான் என்று போலீஸ் தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற 2 பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 17 வயது சிறுமியை 5 ஆண்கள் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்தது மேலும் திருமணம் ஆன பெண்ணை அவளது குழந்தையைக் காட்டி பயமுறுத்தி கூட்டுப் பலாத்காரம் செய்தது என அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் 8 வயது சிறுமியை 7 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அம்மாநிலத்தின் சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் மக்களிடையே கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout