close
Choose your channels

சீதக்காதியின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

Tuesday, October 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு திரைப்படம் என்ற கணக்கில் ரிலீஸ் செய்து வரும் விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'சீதக்காதி' அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமை பெற்ற நிறுவனம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

நல்ல கதையம்சம் உடைய மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து, அதை மக்களிடம் சிறந்த முறையில் மிகுந்த கவனத்தோடு கொண்டு சேர்க்கும் முயற்சியை தொடர்ந்து செய்து வரும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தற்போது விஜய் சேதுபதியின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் சீதக்காதி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார்.

மேலும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்த 'விக்ரம் வேதா' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படமும் அதே வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நல்ல கதை எப்போதும் தன்னை நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் திறமையானவர்களை சென்று சேரும்' என்ற நம்புகிறார்கள் பேஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளார்கள். பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் செய்திருக்கும் விஷயங்கள் நிச்சயமாக உலகளாவிய பார்வையாளர்களால் பாராட்டப்படும். இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது மேடை நாடகக் கலைஞராக தோன்றுவதை கண்ட ஒட்டுமொத்த திரையுலகில் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறது. மேலும், சீதக்காதியில் விஜய் சேதுபதியே தனது பரிசோதனை முயற்சியை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டி.கே.சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்ய, '96' படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment