ஈ.வெ.ரா, அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த வாரிசு விஜய்.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் வாரிசு விஜய் தான் என அவரது ரசிகர்கள் திருச்சியில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், சமீபத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். அதே நேரத்தில், அவரது கட்சியின் முதல் மாநாட்டுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த அரசியல் தலைவர்களின் பிறந்த நாளின் போது நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததோடு, பெரியாரின் பிறந்த நாளன்று அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருச்சியில் விஜய் ரசிகர்கள், தமிழக அரசியலில் மூன்றெழுத்து ஈவேரா, அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசு விஜய் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

ஜெயம் ரவி விவகாரம்: முதல் முறையாக மனம் திறந்த பாடகி கெனிஷா..!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்கள்

மனைவி குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த இன்ஸ்டாகிராம்.. ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு..!

நடிகர் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை, அவருடைய மனைவியின் குடும்பத்தினரே இதுவரை கையாண்டு வந்த நிலையில், தற்போது அந்த கணக்கை அவர் மீட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ்ன்னா இப்படி இருக்கனும்.. ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நாகார்ஜூனா..!

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் தெலுங்கு சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

வில்லனாக நடிக்கும் மம்முட்டி.. ஹீரோவாக நடிக்கும் 'ஜெயிலர்' வில்லன்.. ஆச்சரிய தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி

'சத்யா' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு... இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'சத்யா' திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானதை அடுத்து, கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்