மொபைல் போன் சிக்னலுக்காக மலை உச்சியில் தங்கைக்கு குடிசை போட்டுக் கொடுத்த அண்ணன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் மொபைல் ஃபோன் டவர் கிடைக்கவில்லை என்பது மாணவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கலாகும். இந்த நிலையில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு அவரது சகோதரர் மொபைல் போன் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மலை உச்சியில் ஒரு குடிசை போட்டுக் கொடுத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சுனிதா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்து உள்ளார். அவர் தற்போது எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தயார் செய்து வருகிறார். அவரது வீட்டில் மொபைல் போன் டவர் சுத்தமாக கிடைக்கவில்லை என்பதால் அவரது சகோதரர் அருகிலுள்ள மலை உச்சியில் ஒரு சின்ன குடிசை போட்டுக் கொடுத்துள்ளார்.
அந்த குடிசையில் தான் அந்த மாணவி தற்போது மருத்துவ நுழைவு படிப்பிற்கான தேர்வான நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அந்த குடிசையின் உட்கார்ந்து அந்த மாணவி பாடங்களை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Ms Sunita, a Tribal girl from India who scored 98 percent in 12 exam & now preparing for MBBS entrance test. This hut is at the top of their village hill range. She use to climb up to this hill range & studied from 7 am to 7 pm everyday. May God bless her & guide her. pic.twitter.com/0aEdIC3ypq
— Licypriya Kangujam (@LicypriyaK) August 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com