'தல' வீட்ல இருக்காரு, நீங்களும் வீட்ல இருங்க: திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, தங்களை தாங்களே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வது ஒன்றே கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது
எனவே அரசு அறிவித்த 21 நாட்களும் ஒரு சில சிரமங்களை பார்க்காமல் மக்கள் அனைவரும் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் ஆகும். இதனை வலியுறுத்தி தான் அனைத்து திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் திமுக பிரமுகரும் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவுமான டி.ஆர்.பி ராஜா அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் மங்காத்தா திரைப்படத்தில் அஜீத் வீட்டில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ”தல வீட்லயே இருக்காரு. நீங்க ??? வீட்டிலேயே இருங்கள். கொரோனா வரும்முன் காப்போம்’ என்று பதிவு செய்துள்ளார். தல அஜித்தை குறிப்பிட்டு எம்எல்ஏ டிஆர்பி ராஜா அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த டுவிட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
#தல வீட்லயே இருக்காரு.
— T R B Rajaa (@TRBRajaa) March 25, 2020
நீங்க ???
வீட்டிலேயே இருங்கள் ???? #கொரோனா வரும்முன் காப்போம் ???? #Thala IS STAYING AT HOME.
And SO SHOULD YOU ????#StayHomeTN #StayHomeIndia#StayHomeStaySafe pic.twitter.com/zT9GreVwxi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com