ஒரே ஒரு முத்த புகைப்படம்: சிக்கலில் மாட்டிய காதலர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவை சேர்ந்த காதலர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த ஒரே ஒரு முத்த புகைப்படம் பெரும் பரபரப்பாகி, நெட்டிசன்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியதோடு, வழக்கையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பிரியர்களான கெல்லி மற்றும் கோடி ஆகிய இருவரும் காதலர்கள். உலகை சுற்றி வருவதே இவர்களுக்கு பொழுதுபோக்கு. இந்த நிலையில் பாலி என்ற பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் காதலர் நிற்க, நீச்சல் குளத்திற்கு வெளியே காதலி மிகவும் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருந்தார். காதலனின் கை, சிறிது பிசகினாலும் காதலி மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்து உயிரை இழக்கும் அபாயம் இருந்தது. ஆனால் இந்த அபாயத்திலும் இருவரும் முத்தமிட்டவாறு போஸ் கொடுத்திருந்தனர். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். இது ஆபத்து என்று எங்களுக்கு தெரிந்திருந்தாலும் நாங்கள் பாதுகாப்புடன் தான் இருந்தோம். நான் என் காதலியை கைவிடமாட்டேன் என்று அவரும் உறுதியாக நம்பினார்' என்று இந்த புகைப்படத்திற்கு காதலர் கெல்லி விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும் இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இதேபோன்று முயற்சிக்கலாம் என்றும், இந்த புகைப்படம் ஆபத்தானது என்றும், இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் அமெரிக்க போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments