பயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த 2 வார முழு ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. சில நாட்கள் குறிப்பிட்ட தளர்வுகள் இருந்த நிலையில், தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வருகின்ற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்ய http://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
வெளிமாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களுக்குள், பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள காரணங்கள்
1. உறவினர்களின் இறப்பு
2. திருமணம்
3. முதியோர் பராமரிப்பு தேவைகள்
4. மருத்துவ அவசரம்
பிற காரணங்களுக்கு எதற்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இ-பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்
1. தங்களுடைய மொபைல் எண்
2. பயண காரணத்திற்கான ஆவணம்
3. அடையாள சான்று
(ஆதார் அட்டை (அ),பான் அட்டை(அ),பாஸ்போர்ட் (அ), ஓட்டுநர் உரிமம்(அ), ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு அடையாளச் சான்றை ஸ்கேன் செய்து பதிவிட்டால் போதுமானது.
பயணிகளின் எண்ணிக்கை
இரு சக்கர வாகனம் - 1 நபர்
நான்கு சக்கர வாகனம் - 3 நபர்
ரயில் - தனிநபர் எனக்குறிப்பிட வேண்டும்.
இ -பாஸ் முறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்த நிலையில், இ- பதிவு முறை இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. http://eregister.tnega.org என்ற அரசு இணையதளத்தில், பதிவு செய்து நீங்கள் ஆவணத்தை வைத்திருந்தால் போதுமானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com