போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். சென்னையில் இன்று காலை குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயங்கியதால்  ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று போக்குவரத்து ஊழியர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று மாலையே திடீரென பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்,

பேருந்துகள் போதிய அளவில் ஓடாததால் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

சென்னை மட்டுமின்றி, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.

அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பு, தொழிலாளர்கள் இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தினக்கூலி அடிப்படையில் ஆட்களை பணியில் அமர்த்தி பேருந்துகளை இயக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

More News

சீனுராமசாமியின் அடுத்த பட இசையமைப்பாளர் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனுராமசாமியின் 'தர்மதுரை' கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேஎற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்

ரஜினி-கமல் அரசியல் பயணத்திற்கு சூர்யா வாழ்த்து

எம்ஜிஆர், ஜெயலலிதா உள்பட பல கோலிவுட் திரையுலகினர் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது ரஜினி, கமல், விஷால் ஆகியோர்களும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

ஜெய்யால் ரூ.1.5 கோடி நஷ்டம்: பலூன் தயாரிப்பாளரின் பதற வைக்கும் புகார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'AAA' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சிம்புவின் மீது சரமாரியாக புகார் கூறிய நிலையில் அதேபாணியில் தற்போது ஜெய் மீது 'பலூன்' பட தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீண்டும் தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிய்ல் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோர்கள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூ.500க்கு கூவிக்கூவி விற்கப்படும் ஆதார் தகவல்கள்: அதிர்ச்சி தகவல்

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்த மத்திய அரசு, ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்திருந்தது.