ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கம்: முடிவுக்கு வந்தது போக்குவரத்து போராட்டம்
- IndiaGlitz, [Wednesday,January 10 2018]
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது/
இந்த வழக்கின் விசாரணையின்போது அரசு அறிவித்த 2.44 என்ற காரணி ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டு பேருந்துகளை இயக்குங்கள் என்றும், பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளார்கள் என்றும் நீதிமன்றம் தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தியது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள், அரசு அறிவித்த ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதாகவும், அதே நேரத்தில் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் தொழிற்சங்கள் நிபந்தனை விதித்தது.
இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் இன்று இரவு முதலே ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவார்கள் என்றும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் இன்று இரவு முதல் வழக்கம்போல் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.