அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி, மகளுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இன்றும் தமிழகத்தில் 5709 பேருக்கு கொரோனா பாதிப்பும் கொரோனாவால் 121 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.எஸ். விஜயபாஸ்கர் அவர்களின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து மூவரும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.