கஸ்தூரி வீட்டை துடைப்பத்துடன் முற்றுகையிட்ட திருநங்கைகள்
- IndiaGlitz, [Saturday,June 16 2018]
சமீபத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களின் வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பை அளித்த இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்லவுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் உள்பட பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் ஒரு கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த கருத்து தீர்ப்பை திருநங்கையுடன் ஒப்பிடப்பட்டதுடன், திருநங்கைகளை இழிவுபடுத்தும் ஒரு புகைப்படமும் பதிவாகியிருந்ததாக தெரிகிறது.
கஸ்தூரியின் இந்த பதிவுக்கு திருநங்கைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் சமாதானம் அடையாத திருநங்கைகள் இன்று அவருடைய வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட சில திருநங்கைகளில் கையில் துடைப்பங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரி தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரிய பதிவு குறித்து கஸ்தூரி கூறுகையில், 'Stand up என்று ஒரு genre உண்டு. கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற comedyதான், அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுக்கள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி சன்னி லியோன் பற்றி நான் fwd செய்த கமெண்டும் இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.
இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்க வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.