திருநங்கை MLA? அரசியலில் திருநங்கைகளின் நிலைமை குறித்த பிரத்யேக பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கினால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினை தோற்கடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிகழ்வை அடுத்து திருநங்கைகளின் அரசியல் பங்கேற்பு பற்றிய விவாதம் சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கிறது.
அந்த வகையில் அரசியல் களத்தில் திருநங்கைகளின் நிலைப்பாடு என்ன? தற்போது இருக்கும் அரசியல் களத்தில் திருநங்கைகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுகிறதா? ஒருவேளை வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் தங்களின் மீதான சமூக மதிப்பு எவ்வாறு முன்னேற்றம் காணும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் வழங்கி இருக்கிறார் சமூக செயற்பாட்டாளரான மலாய்க்கா.
இவர் “சகோதரன்” எனும் அமைப்பை நிர்வகித்து வருவதோடு திருநங்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக குரல் கொடுக்கவும் செய்கிறார். மேலும் தொலைக்காட்சி மற்றும் சினிமா சார்ந்த துறைகளில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் மலாய்க்கா திருநங்கைகள் எந்த வழிமுறைகளைப் பின்பற்றி சமூகத்தில் அடையாளம் பெறுவது? அவர்களுடைய திறமைகள் என்ன? தற்போதைய சூழலில் தங்களுடைய வாழ்வியலை எப்படி மாற்றி அமைத்துக் கொள்வது?
மேலும் இதற்கு முன்பு அரசியல் நிலைப்பாடுகளில் கவனம் பெற்ற திருநங்கைகள் யார் யார்? அரசியலில் எப்படி தங்களுடைய இடத்தை ஏற்படுத்திக் கொள்வது? எனப் பல கேள்விகளை முன்னிறுத்தி நமக்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout