இந்தியாவிலேயே முதல்முறையாக, உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநங்கை..!

  • IndiaGlitz, [Thursday,January 02 2020]

நாமக்கல் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இவரே, இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் 5,000 வாக்குகள் உள்ளன. கருவேப்பம்பட்டி ஊராட்சியை உள்ளடக்கிய இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திருநங்கை ரியாவை (30) மாவட்ட திமுக தேர்வு செய்தது. அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் - சின்னபாப்பா தம்பதியினர், ரியாவின் பெற்றோர் ஆவர். இதையடுத்து திருநங்கை ரியா, கடந்த டிச.3-ம் தேதி திமுக சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று (ஜன.2) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இந்த தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 

More News

ஒபாமாவுக்கு பிடித்த இந்திய பாடல் எது தெரியுமா..?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2019 ஆண்டு தனக்கு படித்த பாடல்கள் என்று பதிவிட்டிருந்தார்.அந்த பட்டியலில் இசையமைப்பாளர் பிரதீக் குஹத் எழுதிய 'Cold/Mess' என்ற பாடல் இடம்பிடித்துள்ளது.  

வரப்போகிறது ஜியோ மார்ட்..! ஆஃபர்களை அள்ளிக் கொடுக்க தயாராகும் அம்பானி.

Flipkart, Amazon நிறுவனங்களுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம், JioMart என்கிற ஆன்லைன் வர்த்தக முறையை அறிமுகம் செய்ய உள்ளது.

"புகார் கொடுங்க.. H.ராஜாவையும் கைது செய்கிறோம்"..! அமைச்சர் ஜெயக்குமார்.

நெல்லை கண்ணன் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை எதிர்பார்க்க வைத்த ஜிவி பிரகாஷின் அதிரடி அறிவிப்பு

கடந்த 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், அதன் பின்னர் கடந்த 13 ஆண்டுகளில் விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஆர்யா,

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய இரண்டு திரைப்படங்கள்!

வரும் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் மற்றும் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் எ