நயன்தாராவின் சகோதரி கேரக்டரில் திருநங்கை நடிகை

  • IndiaGlitz, [Saturday,January 19 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐரா' என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் தெரிந்ததே.

நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு கேரக்டரில் கருப்புநிற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது சமீபத்தில் வெளியான டீசரில் இருந்து தெரிய வந்தது. பிளாஷ்பேக்கில் வரும் இந்த கேரக்டருக்கு சகோதரியாக திருநங்கை நடிகை ஜீவா நடித்துள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ஜூன் இயக்கத்தில் கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.