ரஜினியுடன் இணையும் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,February 18 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் ஷங்கரின் '2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


சென்னை அருகேயுள்ள தனியார் தீம்பார்க் ஒன்றில் ரூ.20 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிரடி சண்டைக்காட்சி படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன Die Hard மற்றும் Pearl Harbor போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த Kenny Bates இந்த ஸ்டண்ட் காட்சியை இயக்கவுள்ளார். அவருடன் சென்னை மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த ஸ்டண்ட் நடிகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த ஸ்டண்ட் காட்சி மூன்று வித்தியாசமான ஸ்டேஜ்களில் மல்டிகேமராக்கள் மூலம் 3D டெக்னாலஜியில் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.