தெலுங்கானா என்கவுண்டர் போலீசார்களை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யுங்கள்: பிரபல நடிகை கோரிக்கை

தெலங்கானா மாநில போலீசார் இன்று அதிகாலை நடத்திய என்கவுண்டர் நடவடிக்கைக்கு ஒரு பக்கம் பேராதரவு கிடைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எந்தவித குற்றவாளியாக இருந்தாலும் சட்டப்படிதான் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் சட்டத்தை போலீசாக இருந்தாலும் தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் என்கவுண்டர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எந்தவித சமூக சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு அதிரடியாக தனது கருத்தை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி இந்த என்கவுன்ட்டர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்தாமல் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அதிகாரிகளை உன்னாவ், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இதே தண்டனை மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் கிடைக்குமா? பிரபல வீராங்கனை கேள்வி

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் சுட்டு, என்கவுண்டர் செய்த விவகாரம் நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசத்தில் நடனத்தை நிறுத்தியதால் பெண் மீது துப்பாக்கிச் சூடு..! வீடியோ.

உத்திரபிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் நடனம் ஆடிய பெண்ணின் முகத்தில் ஒருவர் சுட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பால் பரபரப்பு

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த நான்கு பேர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்தது

திருடலாம்னு வந்தேன் சார்.. ஆனா தூக்கம் வந்துருச்சு. திருடப்போன இடத்தில் தூங்கிய திருடன்.

விருதுநகரில் பெருமாள் கோயிலில் திருட வந்த செந்தூர்பாண்டி என்ற திருடன், மது போதையில் அங்கேயே உறங்கிவிட, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மாயாவதி.

ஹைதராபாத்தில் ஒரு வாரம் முன்பு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்