தெலுங்கானா என்கவுண்டர் போலீசார்களை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யுங்கள்: பிரபல நடிகை கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலங்கானா மாநில போலீசார் இன்று அதிகாலை நடத்திய என்கவுண்டர் நடவடிக்கைக்கு ஒரு பக்கம் பேராதரவு கிடைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எந்தவித குற்றவாளியாக இருந்தாலும் சட்டப்படிதான் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் சட்டத்தை போலீசாக இருந்தாலும் தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் என்கவுண்டர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எந்தவித சமூக சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு அதிரடியாக தனது கருத்தை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி இந்த என்கவுன்ட்டர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்தாமல் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அதிகாரிகளை உன்னாவ், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hyderabad Cops have taken law into their own hands, & dispensed encounter justice to the 4 accused rapists of Dr Priyanka Reddy. I demand that strict action be taken on them and they be immediately transferred to Unnao & Pollachi. #PrakashReddy #VCSajjanar #KATZ #PICK kas131
— Kasturi Shankar (@KasthuriShankar) December 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com