'புலி' இசை வெளியீட்டு விழாவினால் மன உளைச்சலுக்கு ஆளானேன். டி.ராஜேந்தர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடித்த புலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பேச்சு எந்த அளவுக்கு விஜய் ரசிகர்களால் ரசிக்கப்பட்டதோ, அதே அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரால் கிண்டலடிக்கப்பட்டது.
இதுகுறித்து டி.ராஜேந்தர் நேற்று நடைபெற்ற 'போக்கிரி ராஜா' திரைப்படத்தின் சிங்கிள் வெளியீட்டு விழாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது: 'புலி' படத்துக்குப் பிறகு எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ளக்கூடாது என முடிவு செய்தேன். அந்த விழாவில் `புலி`யைப் பற்றி தொடர்ச்சியாக பேசினேன். எல்லாமே என் மனத்தில் இருந்து வந்ததுதான்.
புலி என்று படத்துக்குப் பெயர் வைக்க ஒரு தில் வேண்டும். எனக்கு 'புலி' என்ற வார்த்தை மிகவும் பிடித்தமான ஒன்று. நான் ஈழத்தமிழர்கள் மீது அதிகப் பற்று வைத்திருப்பவன். அந்த வகையிலும்' புலி' என்கிற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் அப்படிப் பேசினேன்.
அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிறகு, யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் கிண்டலடித்தார்கள் என்பது அந்தக் கடவுளுக்குதான் தெரியும். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வந்தபிறகு நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால்தான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று சொன்னேன்' என்று டி.ராஜேந்தர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com