விஜயகாந்த்-டி.ராஜேந்தர் சந்திப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களை நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசனுடன் விஜயகாந்த் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது மகன் குறளரசன் திருமண அழைப்பிதழை விஜயகாந்திடம் டி.ராஜேந்தர் அளித்தார்.
இதுகுறித்து விஜயகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இயக்குநர் - இசையமைப்பாளர் - நடிகர் - சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில், மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார்.
கடந்த 1987ஆம் ஆண்டு வெளிவந்த விஜயகாந்த் நடித்த 'கூலிக்காரன்' என்ற படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout