தனுஷை 'தலைவா' என அழைத்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ’தலைவா’ என அவரது ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் வழக்கம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனுஷை ’தலைவா’ என அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’தலைவா’ தனுஷுடன் ஜிம்மில் ஒரு பயிற்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த வீடியோவின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ’மரணம் மாஸ்ஸூ மரணம்’ என்ற பாடலின் பின்னணி ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ் ஏற்கனவே நடித்த பாலிவுட் திரைப்படமான ’ராஜண்ணா’ படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார் என்றதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Training with thalaiva @dhanushkraja ✨ pic.twitter.com/MN3XhxlOCG
— Sara Ali Khan (@iam_SaraAliKhan) November 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com